கழுத்தில் வாள் வைத்து மிரட்டி பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று(16) அதிகாலை யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சமையலறை புகைப் போக்கி வழியாக உள்நுழைந்த ஐந்து பேர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் வாள்களை வைத்து “சத்தமிட்டால் வெட்டுவோம்” எனக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரியிவ்விக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வீடு முழுவதும் சல்லடையிட்டுத் அங்கிருந்த பெறுமதியான தங்கநகைகள், பணம் என்பவற்றைச் எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.