யாழில்.டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த 55 வயதான வீரசிங்கம் ரவீந்திரன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணிபுரிந்த குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் காய்சலினால் பீடிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் உரிய சிகிச்சைகளை பெறாது இருந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி கடும் சுகவீனமுற்ற நிலையில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்.
எனினும் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோயின் தாக்கமே அவரின் உயிரிழப்பு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.