யாழில் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடல்

தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருக்கலாமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்தவாரம் நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து, மாவட்டரீதியிலான பாதுகாப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்திற்கான கலந்துரையாடல் நேற்று நடத்தப்பட்டது. இதன்போது முப்படைஅதிகாரிகள், பொலிசார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

இதன்போதே குறித்த எச்சரிக்கையினை பொலிஸார் விடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாணவர்கள் கூடும் தனியார் கல்வி நிலையங்களை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனம்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment