யாழில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிவிட்டு பணம் கொள்ளை..

யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை மூவரடங்கிய குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

சுன்னாகம் சூராவத்தை பகுதியில் நேற்று  இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து சென்ற போது சூராவத்தை பகுதில் முகத்தை மறைத்தவாறு,

தலைக்கவசம் அணிந்திருந்த மூவர் ஊழியர்களை மறித்து தாக்கி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளநிலையில் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஊழியர்கொள்ளைதனியார் நிதி நிறுவனம்பணம்யாழ்.சுன்னாகம்
Comments (0)
Add Comment