யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடிப் பகுதியிலுள்ள இரு பெண்கள் தனித்திருந்த வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மோட்டார்ச் சைக்கிளில் சென்ற ஆறுபேர் கொண்ட குழு வீட்டிலிருந்த பல பெறுமதியான பொருட்களையும் அடித்துடைத்துக் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
.வாள்வெட்டுக் குழு வீட்டுக்குள் உள்நுழைந்ததையடுத்து வீட்டில் நின்ற இரு பெண்களும் அதிர்ச்சியடைந்ததுடன் அங்கிருந்து ஓடி ஒழிந்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.