யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் ,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே மர்மக்காச்சலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு காச்சல் அதிகரித்து உள்ளதை அடுத்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை அந்த மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை என்றும் , அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.