யாழில் மீண்டும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம்.

யாழ். மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழுவினர், வீட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த  சம்பவம் நெற்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்களில் சென்ற வாள்வெட்டுக்குழுக்களை சேர்ந்த  6 பேர் இந்த  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த  வீட்டின் கதவு, யன்னல்கள், அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார்மானிப்பாய்யாழ்வாள்வெட்டு
Comments (0)
Add Comment