யாழில் மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் ஏனைய மூவரும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ள நிலையில், முச்சகரவண்டி இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதிக்கு சென்ற போது, அந்த நாற்சந்திக்கு மூன்று பக்கங்களாலும் இருந்து வந்த முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதோடு ,எதிரே வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.