யாழில் வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் புங்கன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவரது வீட்டிற்குச் சென்ற ஆவா குழுவினர், வீட்டின் கண்ணாடிகளை உடைத்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வங்கி முகாமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.