யாழில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு

யாழில் பொலிஸாரின் விசேட ரோந்து, வீதி சோதனைகளையும் தாண்டி வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து  கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் , நேற்று இரவு  யாழ்.கலட்டி பகுதியில் உள்ள வீடோன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், பொருட்களையும் அடித்து நாசம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்களை அடக்குவதற்கு பொலிஸார் விசேட ரோந்து மற்றும் வீதி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 மோட்டார் சைக்கிளில் சென்ற  இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் கதவினையும் அடித்து உடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது  சத்தம் கேட்டு ஓடிவந்த அயல் வீட்டாரின் மீதும் அவர்கள் வாள்வெட்டு நடத்த முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து,  மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

2 மோட்டார் சைக்கிள்பொலிஸ் நிலையம்யாழ்ப்பாணம்வாள் வெட்டுவிசேட ரோந்து
Comments (0)
Add Comment