யாழ்தேவி கடுகதி தொடருந்து கிளிநொச்சியில் விபத்து…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி தொடருந்து கிளிநொச்சி உமையாள் புரத்தில் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்த நிலையில் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிரயில்
Comments (0)
Add Comment