யாழ்ப்பாணத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் படையினர் கைவசமுள்ள  சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு மற்றும் மீள்க்குடியேற்றம் தொடர்பில்  ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த காணிகளை விடுவிப்பது குறித்து முப்படைத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில்

இதேவேளை வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை மீள்க்குடியேற்றுவதற்காக ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான கோரிக்கை ஒன்று  அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்போது பல   சவால்களையும் சந்திக்கவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்ட  மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் தற்போது 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்  உதவி அரசாங்க அதிபர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உதவி அரசாங்க அதிபர்காணி விடுவிப்புயாழ்ப்பாணம்வலி.வடக்கு
Comments (0)
Add Comment