யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் தோட்டாக்கள் மீட்பு…

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் கடற்படையினர் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது துப்பாக்கி தோட்டாக்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவ்க்கப்பட்டுள்ளது.

குருநகர் கடற்கரை வீதியில் விசேட ரோந்து நடவடிக்கையினையும், தேடுதல் நடவடிக்கையினையும் மேற்கொண்டிருந்த கடற்படையினர்.அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினை சோதனையிட்டுள்ளனர்

அதனை தொடர்ந்து ஹோட்டலுக்கு அருகில் உள்ள காணியில் சோதனை மேற்கொண்டபோதே குறித்த துப்பாக்கி தோட்டாக்கள் 7 மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தோட்டாக்கள்பொலிஸார்
Comments (0)
Add Comment