விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட 55 மீனவர்களும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 51 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள்.