யாழ்ப்பாணம் – நாவந்துறையில் சிறுமியை கடத்த முயன்றவர் பொலிஸில் ஒப்படைப்பு…

யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில்ம் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை  கடத்திச் செல்ல முற்பட்டதாகவும், அதேபோன்று நேற்றைய தினமும் குறித்த சிறுமியை கடத்தும் நோக்கோடு அங்கு சென்றதாகவும் பிரதேசவாசிகள்  தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரெனவும், சமையல் வேலைக்காகவே யாழ்ப்பாணத்திற்கு  சென்றவர் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸாருக்கு  தகவல் வழங்கிய போதிலும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடத்தல்சிறுமிநாவந்துறையாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment