யாழ் உடுவில் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு குழு வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதோடு , வீட்டில் இருந்த உடமைகளை உடைத்து சேதமாக்கியதோடு , வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேரே இத் தாக்குதலை மேற்கொண்டதோடு , அவர்கள் செல்லும் போது வாள் ஒன்றினை தவறவிட்டு சென்றுள்லதாகவும் தெரியவருகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை வடமாகாண சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..