யாழ் கரவெட்டியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி

யாழ் கரவெட்டியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வடமராட்சி கரவணாய் கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

வீடில் இருந்த தொலைக்காட்சி கேபிள் இணைப்பில் வயரை இணைத்தபோதே மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

யாழ் நகரில் அலைபேசி விற்பனை நிலையமொன்றை நடத்தும் ஜெகனாந்தன் மற்றும் சஞ்சீவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

கரவெட்டிபலிமின்சாரம்யாழ்
Comments (0)
Add Comment