யாழ் கோண்டாவிலில் பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் …

யாழ் கோண்டாவிலில் பலசரக்கு கடை ஒன்றின் மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிகபடுகின்றது.

குறித்த  சம்பவம் இன்று மாலை 6.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீதே இவ்வாறு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற  இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளதோடு,  அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இதேவேளை  இன்று காலை யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில்  சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில்      வாள்வெட்டுக் கும்பல்  கோண்டாவில்  பகுதியில் அடாவடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டகாசம்கோண்டாவில்பொலிஸார்வாள்வெட்டுகுழு
Comments (0)
Add Comment