யாழ் சன்னா குழு தலைவர்கள் இருவர் நாடுகடத்தல்!

யாழ்ப்பாணத்தினில் செயற்பட்டதாக கூறப்படும் உள்ளுர் சண்டியர்களான சன்னா குழு தலைவர்கள் இருவர் தமிழ்நாட்டில் வைத்து கைதாகியுள்ளனர்.தமிழ்நாடு நாகப்பட்டினம் பகுதியினில் உரிய விசா அனுமதியின்றி நடமாடிய சன்னா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவருமே கைதாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் கைதாகியமை தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரி நட்ராஜிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தே கைதான நபர்களது பின்னணி வெளியாகியிருந்தது.
இலங்கை காவல்துறையினால் தேடப்பட்டுவரும் நிலையினில் மன்னார் கடற்படையினரது உதவியுடன் கடல்வழியே இவர்கள் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்ததாக சொல்லப்படுகின்றது.
தப்பிச்சென்றிருந்த அவர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தியாகைதுசண்டியர்கள்சன்னா குழுதமிழகம்தலைவர்கள்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment