யாழ். சிறைச்சாலைக்கு கஞ்சா எடுத்துசென்ற பெண்…

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கணவனுக்கு கஞ்சா எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனைவி நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

தனது உடமையில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்ட காலமாக யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட அவரது மனைவி  சென்றவெற்றிலை சரையிலிருந்து 4 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து  கைது செய்யப்பட்டிருந்த பெண் நேற்றையதினம்  யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் கணவரை  அவரது மனைவியான இந்தப் பெண்ணே பொலிஸாரிடம் தகவல் வழங்கிப் பிடித்துக் கொடுத்துள்ளார்.

அதோடு சிறைச்சாலைக்கு கஞ்சா எடுத்துச் செல்ல அவரது கணவரின் வற்புறுத்தலே காரணம். எனவும்,,  பெண் 2 பிள்ளைகள்  தாயார் என்பதால்   அவரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என பெண் சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன், நிகழ்வு மற்றும் குடும்ப சூழலைக் கருத்திற்கொண்டு பெண்ணை பிணையில் விடுக்க உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

.

கஞ்சாகணவன்சிறைச்சாலைமனைவியாழ்
Comments (0)
Add Comment