யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெருங்குற்றப் பிரிவினர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி பெருங்குற்றப் பிரிவினர் சுன்னாகம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும்
குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய வகையில் விசாரணைகள் மேற்கொள்வதில்லை எனவும், பல்வேறு விசாரணைகள் இதுவரை முடிவுறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையிலேயே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோவின் அறிவுறுத்தலுக்கமைய,
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவினால் மேற்படி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.