யாழ்.நகர் நோக்கிப் பயணித்த ரயில் மீது கல்வீச்சு – முதியவர் படுகாயம்…

கொழும்பிலிருந்து யாழ்.நகர் நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மீது மதவாச்சிப் பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்துக் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்  இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த பா.சிவச்செல்வம்(வயது-64) என்ற முதியவரே சம்பவத்தில்  படுகாயமடைந்ததாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடுகதி ரயில்கல்வீச்சுகொழும்புமுதியவர்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment