யாழ்  நகை கடைக்குள் புகுந்த குழு அட்டகாசம்…

யாழ்  நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், மற்றும் அவரின் குடும்பத்தினரை  மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாரின் பிடியில் இருந்து  தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகை செய்ய கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் செய்ய கொடுத்த நகையின் அளவு சற்று அதிகம் என்பதால் மேலதிகமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடையின் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் கடை உரிமையாளரையும், அவருடைய மனைவியையும் குரூரமாக தாக்கியுள்ளது.

அதோடு அங்கு சென்ற நகை கடை உரிமையாளரின் மைத்துனரையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதன்போது  அங்கிருந்தவர்களும், இரு போக்குவரத்து பொலிஸாரும்  நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததுடன், தர்க்கத்தில் ஏடுபட்டவர்களை  கைது செய்ய முயன்றுள்ளனர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் பொலிஸாரையும் தாக்க முயற்சித்ததோடு, அங்கிருந்து  தப்பி சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இடம் பெற்று சுமார் 2 மணித்தியாலங்களாகியும் மேலதிக பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வரவில்லை விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அட்டகாசம்கும்பல்நகை கடைபொலிஸார்யாழ்.பிரதான வீதி
Comments (0)
Add Comment