யாழ். நவாலியில் மர்ம மனிதர்கள் அட்டகாசம்..

யாழ்.நவாலிப் பகுதியில் நேற்று இரவு  இனம் தெரியாத மர்ம மனிதர்கள் வீடொன்றின்மீது  சாராமரியாகக் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  தாக்குதலில் குறித்த வீட்டிற்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதெனினும்  வீட்டிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நவாலி சங்கரத்தை வீதியிலுள்ள வீடொன்றின் மதிலுக்கு மேலாக சிவப்பு நிற வெளிச்சத்துடன் சிலர் ஏறிக் குதிப்பதை வீடொன்றிலிருந்த இளம் பெண்ணொருவர் யன்னல் ஊடாக அவதானித்துள்ளார்.

இதனையடுத்துச் சிறிது நேரத்தில் வீட்டின் மீது சராமரியாக கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் உரத்துச் சத்தமிடவே அயற்பகுதிகளைச் சேர்ந்த பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டனர்.

இந்நிலையில் அப்பகுதி முழுவதும் சல்லடையிட்டுத் தேடிய போதும் எவரும் அகப்படவில்லை  எனவும் கூறப்பட்டுள்ளது

இதேவேளை யாழ்.அராலியில் கடந்த பல நாட்களாக குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும்,வீடுகள் மீது இரவு வேளைகளில் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

 

தாக்குதல்நவாலிமக்கள்மர்மமனிதர்கள்வீடு
Comments (0)
Add Comment