யாழ் நாவற்குழியில் 65 தமிழ்க் குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு..

யாழ் நாவற்­கு­ழி­யில் வீட­மைப்பு அதி­கார சபைக்­குச் சொந்­த­மான காணி­யில் அத்­து­மீ­றிக்  குடி­யே­றியதாக ­தெரி­வித்து 65 தமிழ்க் குடும்­பங்­கள் மீது வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை வீட­மைப்பு அதி­கார சபை­யின் தலை­வர் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில்  தாக்கல் செய்துள்ளதாகவும் கூரப்படுகின்றது

ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக நாவற்­கு­ழி­யில் உள்ள படை­மு­காமை அண்­டி­யுள்ள வீட­மைப்பு அதி­கார சபைக்­குச் சொந்­த­மான பகு­தி­யில் 65 தமிழ்க குடும்­பங்­கள் குடி­யேறி வசிக்­கின்­ற­னர்.

குறித்த காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­மாறு அறி­வுத்தி அன்ஹ்கிருந்தவர்களிற்கு  கடந்த மே 28ஆம் திகதி பதி­வுத் தபால் அனுப்­பப்­பட்­டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் வீட­மைப்பு அதி­கார சபை­யால் வழங்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­குள் குறித்த குடும்பங்கள் வெளி­யே­றா­த­தால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

65 குடும்பங்கள்நாவற்குழியாழ்ப்பாணம்வழக்குவீடமைப்பு சபை
Comments (0)
Add Comment