கடந்த 05 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டத்தரணி குருபரன் தலைமையில் சட்டத்தரணி சுகாஸ், விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வலிங்கம் திருக்குமாரன், வினேராஜ் மற்றும் சயந்தன், செலஸ்ரின் அகியோர் முன்னிலை ஆகினார்.
இதன்போது சட்டத்தரணி குருபரன் மிகவும் சிறப்பாக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறையில் பிழை இருப்பதை மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொஸிஸ் அத்தியட்சகர் அல்லது அவரின் நிலைக்கு மேல்நிலை அதிகரி ஒருவரால் தான் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டிய அவர் , வழக்கு தாக்கல் செய்த முறை பிழை என்பதை நீதி மன்றத்தில் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டத்தரணி சயந்தன், சட்டமா அதிபரினால் தான் பிணை வழங்க முடியும் என்றும். இல்லை எனில் நீதிபதி, தான் திருப்தி அடைந்தால் பிணை வழங்கமுடியும் என்றும் எடுத்து கூறியுள்ளார்.
எனினும், பொலிஸார் பிணை வழங்க ஆட்சேபனை செய்ததை அடுத்து நாளையதினம் (08ம் திகதி) பிணை வழங்குவதா என்பது தொடர்பில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.