யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – ஒருவர் படுகாயம்..

யாழ். மானிப்பாய் பகுதியில் நேற்றுமதியம் , வாள்வெட்டு குழுவினர் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாயில் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகில்  உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த ஆவா வாள்வெட்டுக் கும்பல் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆவா குழுவிலிருந்து பிரிந்த தனு ரொக் என்பவரது நண்பரின் வீட்டுக்குள்ளேயே ஆவா குழு புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த வீட்டில் இரண்டாவது முறையாகவும் ஆவா குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் முகங்களை மூடியும் சென்ற  9 பேர் கொண்ட கும்பலே இந்த  தாக்குதலை  நடத்தியுள்ளது.

இச்சம்பவத்தின்போது, வீட்டுக்கருகில் மேசன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒருவரே கை மற்றும் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த , சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் மானிப்பாய் பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படுகாயம்மானிப்பாய்யாழ்வாள்வெட்டு
Comments (0)
Add Comment