யாழ்.மிருசுவில் வடக்குப் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு குடும்பஸ்தர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காரொன்றில் சென்ற இனம் தெரியாத சில நபர்கள் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மிருசுவிலை சேர்ந்த தம்பு ஜெயானந்தன்(வயது-57), மற்றும் நமசிவாயம் மகேந்திரன்(வயது-58) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.