யாழ். வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – மடக்கிபிடித்த பொதுமக்கள்..

யாழ். வடமராட்சி கிழக்கில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
இதன்போது   3 பேர் தப்பி சென்றுள்ள நிலையில் 4 பேரை பொதுமக்கள்  பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் கடத்தல்கார்களை சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் கடத்தி சென்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற  பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது,
கடத்தப்பட்ட முதியவர் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே தாம் கடத்தியதாகவும் கடத்த்தி சென்றவர்கள்  கூறியுள்ளனர்.
இதேவேளை  கடத்தல்காரர்களில்  இருவர் இயக்கச்சி இராணுவ முகாமை சேர்ந்த சிப்பாய்கள் என தெரியவந்துள்ளது.
 கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள இரு இராணுவ சிப்பாய்களையும் கொழும்பில் இருந்து வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றே குறித்த முதியரைக்  கடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடத்தல்முதியவர்வடமராட்சி
Comments (0)
Add Comment