யாழ் வீதியில் எழுதப்பட்டுள்ள ஆவா 001 இராஜ்ஜியம் – பொலிஸார் தீவிர விசாரணை…

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு,குற்றச்செயல்களின் பின்னணியின் பாரிய சக்தி ஒன்று இருப்பது மக்கள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் “ஆவா 001 இராஜ்ஜியம்” என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னனியில் பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என  சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பல இளைஞர்கள் கைது செய்து,   நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி,

அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்ற போதும்,  அவர்களை ஒருசில சட்டத்தரணிகள் பிணையில் எடுப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதேவேளை  ஆவா குழுவை யாழில் வைத்து இயக்குவதன் ஊடாக வடக்கில் தமிழ் மக்களை அடக்கி ஆழ ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக மக்களை என்றும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஸ்ரீலங்கா அரசும் படை புலனாய்வாளர்களும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படும் அரசியல் வாதிகளும்  உள்ளமை அனைவரும் அறிந்ததே.

இவர்களின் பின்னணியில் பாரிய சக்தி ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதாகவும்,  இந்த குழுக்களை வைத்து  தமிழ்மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்து, மக்களை அச்சத்தில் வைத்திருப்பதே  அவர்களின் நோக்கம் எனவும்   யாழ்ப்பாண சமூக செயற்பாட்டாளர்கள்  கூறியுளமை  குறிப்பிடத்தக்கது.

ஆவாசெண்பகம்யாழ்ப்பாணம்வாள்வெட்டு
Comments (0)
Add Comment