யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பதிவுகள் மேற்கொள்ள கோரிக்கை!

யுத்தத்தால் 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களையும் நீண்ட காலமாக உள்ளூர் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களையும் பதிவு செய்யுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் மீள்குடியேற்றுவதற்கான செயலணி கோரியுள்ளது.

இது தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள, மீள்குடியேற்றுவதற்கான செயலணி விண்ணப்ப படிவங்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிராமசேவையாளரிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட கிழக்கை அண்மித்த இடங்களிலுள்ள மக்கள் இதன்போது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை, அவ்அவ் கிராம சேவையாளர்கள், பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்களை தொடர்பு கொண்டோ அல்லது www.taskforcepidp.lkwww.resettlementmin.gov.lk என்ற இணையத்தளங்களில் இருந்தோ பெற்றுக் கொள்ள முடியும். அல்லது மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட முகாமையாளரின் 011 2574567 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முடியும்.

இடப்பெயர்வுசெயலணிபாதிப்பு.யுத்தம்
Comments (0)
Add Comment