யுத்தக் குற்றச் செயல் விவகாரத்தில் அரசாங்கம் அவசரப்படாது என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசேட நீதிமன்றம் அமைக்கும் பணிகளில் அரசாங்கம் அவசரம் காட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துதல் தொடர்பில் இந்திய ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் என்ன நேர்ந்தது என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டியது முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஓர் காரியத்தை செய்யுமாறு எவரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மக்களினதும் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு குறித்த யோசனைகள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.