முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் கடற் பகுதியில் 2006 டிசம்பர் மாதமளவில் கரையொதுங்கிய யோர்தான் நாட்டு கப்பலில் பகுதிகள் அகற்றப்பட்டு அடிப்பகுதி கடலில் அவ்வாறே விடப்பட்டுள்ளது
கடலில் காணப்படும் இந்த கப்பலின் அடிப்பகுதியால் கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் கடலில் விடப்படும் வலைகள் காற்று காலப்பகுதியில் நீரில் இழுத்து செல்லப்பட்டு இந்த கப்பலில் சிக்குண்டு வீணாவதாகவும் இந்த பாகங்களில் வள்ளங்கள் மோதி விபத்துக்குள்ளாவதாகவும்,
சில தினக்களுக்குள் கூட இவ்வாறான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கப்பலில் பாகங்களை அகற்றி மீன்பிடியில் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவினை பெற்றுத்தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது