ரயில் மறியல்: திருச்சியில் வைகோ உள்பட 500 பேர் கைது

திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரியும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள் முழுமையாக மூடப்பட்டதாலும், வாகனங்கள் ஓடாததாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதையடுத்து, இன்று காலை திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்ற வைகோவை ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாகாவிரி நதிநீர்திருச்சிமதிமுகரயில் நிலையம்ரயில் மறியல்வைகோ
Comments (0)
Add Comment