ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கு ஆதரவாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், அரசு செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்ட தொகுப்பு ஊதிய செவியர்கள், பணி நிரந்தரம் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நிரந்தர செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை செய்தனர்.

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக அரசு செவிலியர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த அரசு செவிலியர்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.   திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும், 22 மற்றும் 23-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தற்செயல் விடுப்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசுஆர்ப்பாட்டம்ஊதியம்காந்திசெவிலியர்தொகுப்புபொதுமருத்துவமனைராஜீவ்
Comments (0)
Add Comment