ராஜீவ் காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் மின்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.   இதனையடுத்து, அந்த அறையில் இருந்த 18 நோயாளிகள் பாதுகாப்பாக கீழ்த்தளத்தில் இருந்த தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

சிறிய அளவிலான தீ விபத்து என்பதால் மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்து விட்டனர்.   தற்போது, நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்கசிவினால் புகை மட்டுமே ஏற்பட்டதாகவும், நோயாளிகள் பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சிகிச்சைதீ விபத்துதீவிரபிரிவுமருத்துவமனைராஜீவ் காந்தி
Comments (0)
Add Comment