தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மேலிடத் தலைவர் முகுல் வாஸ்னிக் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று காலை தில்லியில் தேசிய தேர்தல் ஆணையாளர் நஜிம் ஜைதியை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவை அளித்துள்ளனர்.
இந்த மனுவில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை தேவை எனவும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைவர் கருணாநிதியிடம் அனுமதிபெற்று, இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தேர்தல் ஆணையாளரிடம் தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் புகார் மனு அளிப்பார்கள் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.