ராணுவ வீரரை ‘ஷூ லேஸ்’ கட்ட வைத்த ராஜ்நாத் சிங்

ராணுவ வீரரை ‘ஷூ லேஸ்’ கட்ட வைத்து அவமரியாதை செய்துவிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் சென்றிருந்தார்.

அப்போது அவரது கால்களில் அணிந்திருந்த ஷூவின் லேஸ்கள் அவிழ்ந்ததை இராணுவ வீரர் ஒருவர் கட்டியது, காணொளி கமெராக்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தனது ஷூ லேஸை கட்ட ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாரா?, அல்லது அந்த வீரரே தாமாக முன்வந்து ஷூ லேஸை கட்டிவிட்டாரா? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் இதற்கு பல்வேறு கட்சிகளால் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=apWiF52uhUo” width=”560″ height=”315″]

'ஷூ லேஸ்'அமைச்சர்அவமரியாதைஎன புதியஎழுந்துள்ளதுஒன்றுகட்டசர்ச்சைசெய்துவிட்டார்மத்தியராஜ்நாத் சிங்ராணுவவீரரைவைத்து
Comments (0)
Add Comment