இதையடுத்து பாம்பனில் நேற்று இரவு நாட்டுப்படகு மீனவ சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.