ராமேஸ்வர மீனவர்கள் 11 பேர் சிறி.கடற்படையால் கைது

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.   ராமேஸ்வரத்தில் இருந்து 565 விசைப் படகுகளில், மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர்.

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் குறைவான மீன்களோடு, மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.   இதனிடையே, மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து, அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கைகடற்படைகைதுமீனவர்கள்ராமேஸ்வரம்விசைப்படகு
Comments (0)
Add Comment