ராம்குமார் வெளியே வந்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்பதால் சிறையில் கொலை செய்யபட்டார் என பல்வேறு தரப்பினர் புகார் கூறிவரும் வேலையில்.
கடந்த 10ம் தேதி ராம்குமார் தனது வக்கீலிடம் கொடுத்த கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் ‘‘தனக்கு சுவாதியை யார் என்றே தெரியாது.
நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை’’ ‘‘நான் சென்னையில் தங்கியிருந்த அறையில் இருந்து போலீஸார்
கைபற்றபட்டதாக கூறுவதில் உண்மை இல்லை’’. ‘‘உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்’’.
‘‘என்னை போலீஸார் கைது செய்யவந்த போது அவர்களை என் கழுத்தை அறுத்தனர்’’. ‘‘சுவாதி கொலை செய்த உண்மை குற்றவாளியை கைது செய்யவேண்டும்’’ என்று உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டிந்தார்.
இந்நிலையில் நேற்று சிறையில் ராம்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார்.