2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவற்றை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதையடுத்து பழைய தாள்களை திரும்பப் பெறும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கப்பட்டு கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது