ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும் – ரோஹித அபேகுணவர்தன

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால், அவருக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்க நேரிடும் என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அதோடு இதன் காரணமாக ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரேரணை தோல்வியடைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களும் மக்களால் தேசதுரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.

அதன் பின்னர் ஐ. தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உறுப்பினர்கள் என்று கருதும் அளவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்தரப்பினர் விடயத்தில் மாத்திரமே பாதுகாப்பு துறையினர் முறையாக செயற்படுகின்றார்கள் என்றும்,

ஆனால் இதுவரையில் நீதித்துறைக்கு அவப்பெயரினை ஏற்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி கவிழ்ப்புநம்பிக்கையில்லா பிரேரணைரிசாத் பதியுதீன்
Comments (0)
Add Comment