ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைப்பு : அருண் ஜெட்லி

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரூ.3 லட்சம் வரை ரொக்கமாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமற்ற பரிமாற்றமாக செய்ய வேண்டும் என்றும் இந்த நடைமுறை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறினார். கருப்பு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு கொடுத்த பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை ரூ.2 லட்சமாக குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று நிதி மசோதாவில் இதற்கான திருத்தத்தை கொண்டு வந்தது. இதை மீறி, ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கத்துக்கு, அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

நிதி மசோதாவில், ரொக்க பரிமாற்றத்துக்கான திருத்தம் மட்டுமின்றி, 40 சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கம்பெனி சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது பின்வாசல் வழியாக காரியம் சாதிக்கும் செயல் என்று அவர்கள் விமர்சித்தனர். ஆனால், அவர்களின் ஆட்சேபனையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். இந்த திருத்தங்களை ந%B

அருண் ஜெட்லிகருப்பு பணம்நிதி மசோதாமத்திய பட்ஜெட்ரொக்க பரிமாற்றம்