கட்டான கடியல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் மீதே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கான்ஸ்டபிள் ஒருவரின் ரிவோல்வரை கைப்பற்றி, அந்த கான்ஸ்டபிள் மீதும்; அவருடைய உதவியாளரான மற்றுமொரு கான்ஸ்டபிள் மீதுமே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பின்னர், துப்பாக்கி தாரிகள், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அதிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், மோட்டார் சைக்கிளையும் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.