குறித்த சம்பவம் நுவரெலியா – Gregory ஏரியில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது.
இதன்போது ஏரியில் விழுந்த இரு பெண்களையும் காப்பற்றப் பட்டுள்ளனர்.
லண்டனில் வசித்து வரும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த போதே குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் Gregory ஏரியில் படகில் சென்ற போது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்போது இரு பெண்களும் நீரில் விழுந்து தத்தளித்துள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த சுழியோடிகள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.