தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தின் 100-வது நாளான நேற்றியதினம் ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் கலவரமாக மாறியதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டில் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன்பாக ஒன்று திரண்ட தமிழர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும்,
.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர்.