லண்டனில்   ஹித்ரோ விமான நிலையத்தில் விமானியொருவர் கைது…

லண்டனில்   ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று  244 பயணிகளுடன் ஜப்பானின் டோக்கியோ நோக்கி கிளம்ப தயாராக இருந்தது.
இந்நிலையில்   விமானத்தை ஓட்ட  இருந்த துணை விமானி  முழு குடிபோதையில் இருந்துள்ளார்.
விமான நிலையத்தில் உள்ள பேருந்தின் ஓட்டுனர் ஒருவர் அவருடன்  பேசிய போது அவர் மது அருந்தியிருப்பதை கண்டுப்பிடித்துள்ளார்.
இதை அடுத்து அவர்  உடனடியாக  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் குறித்த விமானி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்,
அதன்போது ஒரு விமானி அருந்தவேண்டிய மதுவின் அளவை விட 10 மடங்கு மதுவை  குறித்த விமானி அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக விமானி  கைது செய்யப்பட்ட நிலையில் விமானமானது 69 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றுள்ளது..
இதேவேளை விமானியின் செயலுக்காக பயணிகளிடம் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதுஜப்பான்மதுவிமானி
Comments (0)
Add Comment