லொறி – பஸ் நேருக்கு நேர் விபத்து! ஐவர் படுகாயம்

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்ஹில் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை பகுதியை நோக்கிப் பயணித்த லொறியும், நுவரெலியாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்தின் போது, தனியார் பேருந்தில் பயணித்தவர்களில் மூவரும், லொறியில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாபஸ்போலீஸ்லொறிவிபத்து
Comments (0)
Add Comment