வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.  8 மணிநேரம் விசாரணை…

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழரை பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்,

முன்னாள்  கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.யினர்  இன்று  8 மணிநேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளர்.

இன்று காலை  9.00 மணிக்கு  கோட்டையில் உள்ள சி.ஐ.டி.  தலைமையகத்துக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சென்ற அத்மிரால் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரிடம்  விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரிடம்  விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் மீளவும்   நாளைமறுதினம் 13 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 தமிழர்கள்செண்பகம்வசந்த கரன்னாகொட
Comments (0)
Add Comment